×

காரைக்குடி அருகே 20 வருடங்களுக்கு பிறகு மாஸ் காட்டிய பொய்யலூர் மஞ்சுவிரட்டு: 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே பொய்யலூர் பகுதியில் 20 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பொய்யலூர் காளியம்மன் கோயில் மது எடுப்பு உற்சவ விழாவினை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கோயிலில் இருந்து கிராமத்தார்கள் ஊர்வலமாக மஞ்சு விரட்டு திடலுக்கு வந்து காளைகளுக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.

அதனை தொடர்ந்து கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டதும், மஞ்சு விரட்டுக்கு அழைத்து வரப்பட்ட அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் தொழுவில் இருந்தும் மற்ற வயல்வெளி பகுதிகளில் இருந்தும் அவிழ்த்து விடப்பட்டன. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு மஞ்சுவிரட்டு நடப்பதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

The post காரைக்குடி அருகே 20 வருடங்களுக்கு பிறகு மாஸ் காட்டிய பொய்யலூர் மஞ்சுவிரட்டு: 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Mass ,Karaikudi ,Manjurudi ,Paiyalur ,Sivagangai ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!!